கேரளாவில் 24 மணி நேரத்தில் 2375 பேருக்கு கொரோனா: 21232 பேருக்கு சிகிச்சை

திருவனந்தபுரம்: கேரளாவில் 24 மணி நேரத்தில் 2375 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.

கேரளாவில் இன்று 2,375 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இன்று ஒரு நாளில் மட்டும் 20 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளனர்.

இதன் மூலம் ஒட்டு மொத்தமாக பலியானவர்களின் எண்ணிக்கை 255 ஆக உயர்ந்துள்ளது. இன்னமும் 21,232 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையில் கொரோனாவிலிருந்து இன்று 1,456 பேர் குணமடைந்தனர். ஒட்டு மொத்தமாக 40,343 பேர் குணமடைந்து உள்ளனர் என்று சுகாதாரத் துறை அமைச்சகம் கூறி உள்ளது.