கேரளாவில் 1 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 2988 பேருக்கு தொற்று உறுதி

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளது.

கேரளாவில் தொடக்கத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா கடநத் சில வாரங்களாக உச்சத்தை நோக்கி சென்றது. இந் நிலையில் இன்று 2988 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அம்மாநில சுகாதார துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: கேரளாவில் இன்று 2,988 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை  1,02,191 ஆக பதிவாகி உள்ளது.

இன்று 14 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஒட்டுமொத்தமாக 410 பேர் பலியாகி உள்ளனர். 1,657 பேர் இன்று குணம் அடைந்துள்ளனர். மொத்தமாக இதுவரை 73,904 பேர் குணமடைந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் 27,877 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may have missed