கேரளாவில் இன்று 10 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு: 22 பேர் பலி

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதியதாக 10,606 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டு அறிக்கையில் கூறி இருப்பதாவது: கேரளாவில், மேலும் 22 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர். அதை தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 906 ஆக உயர்ந்து உள்ளது.

புதியதாக இன்று பாதிக்கப்பட்டவர்களில் 55 பேர் வெளிநாடுகளிலிருந்தும், 164 பேர் வெளிமாநிலங்களிலிருந்தும் வந்தவர்கள். 9,542 பேர் உள்ளூர் பரவல் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 741 பேருக்கு எப்படி தொற்று ஏற்பட்டது என்பது உறுதி செய்யப்படவில்லை.

சிகிச்சை பெற்று வந்தவர்களில் 6,161 பேருக்கு தொற்று இல்லை.  தற்போது,  92,161 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தெரவிக்கப்பட்டுள்ளது.