கேரளாவில் இன்று மேலும் 3,349 பேருக்கு கொரோனா தொற்று: 1 லட்சத்தை நெருங்கும் ஒட்டுமொத்த பாதிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று மேலும் 3,349 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தகவலை கேரளா சுகாதார அமைச்சர் ஷைலஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார். கேரளாவில் இன்று 3,349 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் மாநிலத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 99,266 ஆகும். கொரோனா பாதிப்புக்கு இன்று 12 பேர் உயிரிழந்துள்னர். ஒட்டு மொத்தமாக இதுவரை 396 பேர் பலியாகி உள்ளனர்.

கொரோனா தொற்றில் இருந்து இன்று 1,657 பேர் குணம் அடைந்துள்ளனர். மொத்தமாக 72,578 பேர் வீடு திரும்பி உள்ளனர். தொற்று பாதிப்புடன் 26,229 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.