கேரளாவில் இன்று புதிதாக 1,983 பேருக்கு கொரோனா உறுதி: 3வது நாளாக அதிகரிக்கும் பாதிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதிதாக 1,983 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவலை அம்மாநில சுகாதார துறை அமைச்சர் சைலஜா தெரிவித்து உள்ளார். மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 1,419 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி இருக்கின்றனர்.

இதுவரை கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 35,247 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 18,673 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தெரிவித்தார்.

கேரளாவில் 3வது நாளாக 1,900த்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக அதிகபட்சமாக திருவனந்தபுரத்தில் 429 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  மலப்புரம் மாவட்டத்தில் 335 பேர், எர்ணாகுளம் மாவட்டத்தில் 165 பேர், கோழிக்கோடு 158 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.