கேரளாவில் இன்று 821 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: மொத்த பாதிப்பு 12,480 ஆக உயர்வு

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று 821 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் சில தினங்களாக கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.  இந் நிலையில், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 821 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் கேரளாவில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 12,480 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 5,373 பேர் குணம் அடைந்தனர்.

7,063 பேர் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.   கொரோனா சமூக பரவலாக மாறியுள்ளது என்று கூறப்பட்ட திருவனந்தபுரத்தில் இன்று 222 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,267 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது. இது வரை 5,32,505 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன என்று கேரள சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.