கேரளாவில் மேலும் 151 பேருக்கு கொரோனா பாதிப்பு: முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று மேலும் 151 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்து உள்ளார்.

கேரளாவில் தொடக்கத்தில் கட்டுப்படுத்தப்பட்ட கொரோனா தொற்று எண்ணிக்கை கடந்த மாதம் முதல் மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. தினமும் 100க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் கேரளாவில் இன்று மேலும் 151 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறி இருப்பதாவது: மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 151 பேருக்கு கொரோனா இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதன் மூலம கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4,593 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மாநிலத்தில் 2,130 பேர் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று அதில் தெரிவித்துள்ளார்.