அவதூறு வழக்கு – மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நேரில் ஆஜராக சம்மன்!

திருவனந்தபுரம்: மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திற்கு எதிராக முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் தொடுத்த அவதூறு வழக்கில், மே 2ம் தேதி நேரில் ஆஜராகுமாறு திருவனந்தபுரம் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய மக்களவை காங்கிரஸ் உறுப்பினருமாகிய சசி தரூரின் மனைவி, சில ஆண்டுகளுக்கு முன்னர் மர்மமான முறையில் இறந்துபோனார்.

எனவே, இதுகுறித்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், சசி தரூருக்கு எதிராக சர்ச்சைக்குரிய முறையில் கருத்து தெரிவித்தார். எனவே, இதனை எதிர்த்து ரவிசங்கர் பிரசாத்திற்கு எதிராக கடந்த 2018ம் ஆண்டு அவதூறு வழக்குத் தொடுத்தார் சசி தரூர்.

மரணம் குறித்த விசாரணையின் இறுதி அறிக்கை, அது கொலையல்ல என்றே வந்துள்ளது என்பது சசி தரூர் தரப்பின் வாதம். எனவே, இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வரும் மே மாதம் 2ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென அமைச்சருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-