கேரளாவில் 6 லட்சத்தை கடந்தது கொரோனா தொற்று: இன்று மட்டும் புதிதாக 3,382 பேர் பாதிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதியதாக 3,382 பேருக்கு கொரோனா உறுதியாக ஒட்டு மொத்த பாதிப்பு 6 லட்சத்தை கடந்திருக்கிறது.

இது குறித்து அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இன்று புதியதாக 3,382 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து ஒட்டு மொத்த பாதிப்பு 6,02,983 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களில் மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டு மொத்த பலியின் எண்ணிக்கை 2,244 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 6,055 பேர் தொற்றில் இருந்து குணம் பெற்றுள்ளனர்.

ஒட்டு மொத்தமாக 5,38,713 பேர் இதுவரை குணம் அடைந்துள்ளனர். தற்போது 61,894 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.