திருவனந்தபுரம்:

ஒகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.

கன்னியாகுமரி அருகே உருவான ஒகி புயலால் தென் தமிழக மாவட்டங்களான கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களும், கேரளாவில் சில பகுதிகளும் கடுமையாக பாதித்துள்ளது.

கடலுக்கு மீன் பிடிக்க சென்ற பலர் பலியாகினர். இந்நிலையில் ஒகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.