யானைகளுக்கு மரபணு  அடையாளம் : கேரள அரசு புது முயற்சி 

திருவனந்தபுரம்:  நாட்டிலேயே முதன்முறையாக கேரள யானைகள்   மரபணு அடையாளம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

கேரளா வனத்துறை நாட்டிலேயே முதன்முதலாக டியானைகளின் டிஎன்ஏக்கள் மூலம் ஒவ்வொரு யானையின் மரபணு அடையாளத்தையும்  ஆவணப்படுத்தியுள்ளது. ‘ராஜிவ்காந்தி சென்டர் பார் பயோடெக்னாலஜி’ உடன் இணைந்து ஒவ்வொரு யானையின் ரத்த மாதிரியில் இருந்து அதன் மரபணுவைச் சேகரித்து தகவல் தொகுப்பை ஆவணப்படுத்தியுள்ளது.

வீட்டில் வளர்க்கப்படும் 519 யானைகளுக்கு  மரபணு அடையாளம் இப்போது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் யானைகளின் உரிமை குறித்த சிக்கல் அதன் உரிமையாளர்களுக்கு ஏற்படாது.   அதன்மேலும் இந்த மரபணு அடையாளம் இருப்பதால், யானைகளை சட்டத்தை ஏமாற்றி விற்க முடியாது. அதன் உரிமையாளர்கள் பற்றிய தகவல்களையும் போலியாகத் தயாரிக்க முடியாது. கேரள வனத்துறை இந்த மரபணு தகவல்களைக் கொண்டு றி’மொபைல் ஆப்’ கொண்டுவரவும் திட்டமிட்டு வருகிறது.

 

 

கார்ட்டூன் கேலரி