யானைக்கு பழங்களில் வெடி வைத்து கொன்றவருக்கு கடும் தண்டனை.. அட்லீ, திரிஷா , ஐஸ்வர்யா லட்சுமி கண்டனம்

ந்தியா முழுவதும் லாக் டவுன் நிலவிவருகிறது. ஒருபக்கம் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர், இன்னொரு பக்கம் சில கொடூர மனம் கொண்டவர்கள் மிருகங்களை சித்ரவதை செய்து வருகின் றனர்.


கேரளா மாநிலம் மலப்புரம் பகுதியில் கர்ப்பமாக இருந்த யானை ஒன்றுக்கு அன்னாசி பழங்களில் வெடிபொருட்கள் வைத்து கொடுத்துள்ளனர். தண்ணீரில் நின்றபடி அதை சாப்பிட்ட யானையின் வாயில் வெடி வெடித்ததில் அது அங்கேயே இறந்தது.
நெட்டில் இந்த சம்பவம் வைரலாக பரவி யது. அதைக்கண்டு பல நடிகர், நடிகைகள் அதிர்ச்சி அடைந்து தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
’உண்மையான வைரஸ், மனிதர்கள்தான்’ என நடிகை திரிஷா தெரிவித்திருக்கிறார்.
அதேபோல் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, ’கடவுளே இதுபோன்ற கொடூரத்துக்கு முடிவுகட்டு. மனிதர்களை மீண்டும் மனிதர்களாக்கு, கடவுளிடம் என் பிரார்த்தனை வைக்கிறேன்’ என தெரிவித்திருக்கிறார்.
யானையை கொன்ற சம்பவம் அதிர்ச்சி ளிக்கிறது என தெரிவித்திருகிறார் நடிகை பிரணிதா சுபாஷ்.
மேலும் பிகில் டைரக்டர் அட்லீநடிகர் நீரஜ்மாதவ் மேலும் கர்ணன் படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்கும் ரெஜிஷ்ஹ் உள்ளிட்ட பலர் கண்டனமும் அதிர்ச்சியும் தெரிவித்திருக்கின்றனர்.