தல தோனிக்கு விஸ்வாசம் காட்டும் கேரள ரசிகர்கள் – 35 அடியில் கட்அவுட் வைத்து அசத்தல்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியை வரவேற்க திருவனந்தபுரத்தில் பிரமாண்ட கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது.

இந்தியா வந்துள்ள விண்டீஸ் அணி, 2 டெஸ்ட், 5 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்திய அணி, 2-0 என கைப்பற்றி அசத்தியது.

Dhoni

இதையடுத்து நடந்து முடிந்த ஒரு நாள் தொடருக்கான நான்கு போட்டிகளில் இந்தியா 2 போட்டியிலும், விண்டீஸ் ஒரு போட்டிலும் வெற்றிப்பெற்ற நிலையில் ஒரு போட்டி சமனில் முடிந்தது. இந்த தொடரில் இந்தியா 2-1 என்ற நிலையில் முன்னிலை வகிக்கிறது. எனவே, தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியாவும், சமன் செய்யும் நோக்கில் விண்டீஸ் அணியும் இன்று களமிறங்குகின்றனர்.

இந்த தொடரில் தோனி சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்த முடியாமல் போகவே அவரை அணியில் வைப்பதா, வேண்டாமா என்ற விவாதம் அவ்வபோது நடந்த வண்ணம் உள்ளது. ஒரு சிலர் அவர் ஓய்வு பெற வேண்டுமென கருத்து தெரிவித்து வரும் நிலையில், அடுத்து நடைபெற உள்ள டி20 போட்டியில் அவரின் பெயரை அணியில் பிசிசிஐ சேர்க்கவில்லை. இதற்கு நெட்டிசன்களின் விமர்சனங்களை பிசிசிஐ சந்திக்க வேண்டியதாக இருந்தது.

இது ஒருபுறம் இருக்க, இரு அணிகள் மோதும் கடைசி ஒருநாள் போட்டி இன்று திருவனந்தபுரத்தில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் முன்னாள் இந்திய கேப்டன் தோனியை வரவேற்க கேரள ரசிகர்கள் முழுவீச்சில் தயாராகி வருகின்றனர். தோனிக்காக 35 அடி கட் அவுட் தயார் செய்து ரசிகர்கள் வைத்துள்ளனர். தோனிக்கு கட் அவுட் வைத்த வீடியோ மற்றும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.