ஏமனில் கடத்தப்பட்ட கேரள பாதிரியார் பத்திரமாக மீட்பு!

கடத்தப்பட்ட கேரள பாதிரியார் டாம் (முன்னாள், இந்நாள் படங்கள்)

டில்லி:

மனில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட கேரளாவை சேர்ந்த பாதிரியார் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கேரளாவை சேர்ந்த பாதிரியார் டாம் ஏமனில் தொண்டு நிறுவனங்கள் வாயிலாக சேவை செய்து வந்தார். அவர்  ஐ.எஸ்., பயங்கரவாதிகளால்  கடந்த 2016ம் ஆண்டு  மார்ச் 4ம் தேதி கடத்தப்பட்டார்.

அவரை மீட்க கேரள அரசு கேட்டுக்கொண்டதை தொடர்ந்து மத்திய அரசு அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்தது.

இதற்கிடையில், கடத்தப்பட்ட  கேரள மாநில பாதிரியாரை சிலுவையில் அறைந்து பயங்கரவாதி கள் கொலை செய்துவிட்டனர் என்று தகவல்கள் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால், அது உறுதிப்படுத்தப்படாத தகவல் என்று மத்திய அரசு மறுத்து வந்தது.

இந்நிலையில், . மத்திய கிழக்கு நாடுகள் உதவியுடன் . ஐஎஸ் பயங்கரவாதிகளிடமிருந்து பாதிரியார் டாம் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் தற்போது  ஏமன் நாட்டின் ஏடன் நகரில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளார் என்றும், வாடிகன் சென்று போப்பை சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.