கேரள சினிமா நிலவரம்:  கீர்த்தி சுரேஷ் தந்தை அலறல்..

கொரோனா காரணமாக உலகம் முழுவதும் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டு விட்டன.

இந்தியாவும் இதில் அடக்கம்.

இந்தியாவில் சின்ன பட்ஜெட்டில் அதிக அளவில் தயாரிக்கப்படுவது-

மலையாளப்படங்கள் தான்.

ஊரடங்கால், கேரள சினிமா நிலைகுலைந்து போய் விட்டதாக ஆதங்கப்படுகிறார். தயாரிப்பாளர், சுரேஷ்குமார்.

இவர் நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தை.

கேரள சினிமா நிலவரம் குறித்து அவர் தெரிவித்த கருத்து இது:

‘’ கொரோனாவால் உலகம் முழுக்க சினிமா தொழில் பாதிப்பு அடைந்துள்ளது. கேரள மாநிலம் இதற்கு விதி விலக்கு அல்ல.

இது போன்ற ஒரு சூழலை நான் பார்த்தது கிடையாது.ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், கேரள சினிமா உலகம், இயல்பான நிலைக்குத் திரும்ப இன்னும் ஒரு வருடம் ஆகும்’’ என்று  அலற வைத்துள்ளார், சுரேஷ்குமார்.

அந்த மாநிலத்தில் மம்முட்டி, மோகன்லால் ஆகியோரின் படங்கள் உள்ளிட்ட 4 படங்கள்  ரிலீசுக்கு தயாராக உள்ளன.

இந்த படங்களில் 200 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை முதலீடு செய்யப்பட்டுள்ளது.

 ரிலீஸ் தேதி தெரியாத நிலையில் அந்த படத்தயாரிப்பாளர்கள் நிலைகுலைந்து உள்ளனர்.

மலையாள தயாரிப்பாளர்கள் பெரும்பாலும், வேறு தொழில் செய்யும் வணிகர்கள் ஆவர்.

ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டு, மாமூல் நிலை திரும்பினாலும்-

அவர்கள் தங்கள் வியாபாரத்தில் தான் முழுமூச்சாக,  கவனம் செலுத்துவார்கள் என்பதால், மலையாள சினிமா உலகம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

– ஏழுமலை வெங்கடேசன்