வெள்ளப்பாதிப்பு: கேரளாவுக்கு ரூ.25 லட்சம் நிதி வழங்கிய விஜய்சேதுபதி!

சென்னை:

ழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்துக்கு நடிகர் விஜய் சேதுபதி ரூ.25 லட்சம் நிவாரண நிதியாக வழங்கி உள்ளார்.

கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கி உள்ள நிலையில், கடந்த 15 நாட் களுக்கும் மேலாக பேய்மழை கொட்டி வருகிறது. இதன் காரணமாக  கேரளா முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு கேரளா பகுதிகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு உள்ளது. எனவே, கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் உள்ள 13 மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டு மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் வயநாடு மற்றும் பத்தனம் தட்டா பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் கடற்படையின் 21 குழுக்கள் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் பேரழிவை சந்தித்திருக்கும் கேரள மாநிலத்திற்கு பலரும் உதவிக் கரம் நீட்டி வருகின்றனர்.

ஏற்கனவே தமிழக்ததில் இருந்து, தமிழக அரசு சார்பில் ரூ.5 கோடி , திமுக சார்பில் ரூ.1 கோடி உள்பட, நடிகர்கள்  கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, விஷால் உள்பட பலர் நிதிஉதவி அளித்துள்ள நிலையில், தற்போது நடிகர்  விஜய் சேதுபதி கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.