கேரள வெள்ளம்: சேதங்களை பார்வையிட்ட ராகுல் நிவாரண முகாம்களில் மக்களுக்கு ஆறுதல்

--

வயநாடு:

ருவமழையால் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக கேரளா தத்தளித்து வருகிறது. பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் சேதங்கள் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

கேரளாவில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத சேதங்களை முன்னாள் காங்கிரஸ் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி இன்று  பார்வையிட்டார். அப்போது  நிவாரண முகாம்களில் தங்கியிருந்த  மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

கேரள மாநிலத்தில்  கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும்  மழையின் தாக்கம் அதிகரித்துள்ளது. 8-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் சேதமடைந்துள்ளது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் ஏராளமானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் வெள்ள பாதிப்புக்களை பார்வையிட இரண்டு நாள் பயணமாக வயநாடு தொகுதி எம்பியான ராகுல் காந்தி கேரளா சென்றுள்ளார். மலப்புரம் நிலம்பூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமிற்கு சென்ற ராகுல் காந்தி,  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.  மேலும் மழை வெள்ளத்தில் சேதமடைந்த பகுதிகளையும் பார்வையிட்டார்.