சென்னை:

கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக கேரளா செல்லும் பல்வேறு ரயில்கள்  ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அறிவித்து உள்ளன. அந்த ரயில்களுக்கு முன்பதிவு செய்தவர்கள் கட்டணத்தை திரும்பப் பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

கேரளாவில் கனமழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு மற்றும் மரங்கள் விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், கேரளா செல்லும் செல்லும் பல ரயில்வே சேவைகள் அடுத்த 3 நாட்களுக்கு நிறுத்தப்பட்டன.

நேற்று திடீரென பல ரயில்கள் நிறுத்தப்பட்டு உள்ளதால், முன்பதிவு செய்துள்ள ஏராளமான பயணிகள் சென்ட்ரல் ரயில் நிலையித்தில் தங்கினர். பின்னர் பேருந்துகள் மூலம் கேரளாவுக்கு சென்றனர்.

ரத்து செய்யப்பட்ட ரயில் விவரங்கள் வருமாறு:

 வ.எண்.16791/16792 திருநெல்வேலி – பாலக்காடு – திருநெல்வேலி பாலருவி எக்ஸ்பிரஸ் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு  ரத்து செய்யப்படுகிறது.

வ.எண்.16101/16102 சென்னை எக்மோர்-கொல்லம் ஜங்ஷன் எக்ஸ்பிரஸ் தொடர் மழை காரணமாக இன்று முதல் அடுத்தமூன்று நாட்களுக்கு  ரத்து செய்யப்படுகிறது.

வ.எண். 56737/56738  செங்கோட்டை – கொல்லம் பயணிகள் ரயில் சேவை தொடர் மழை காரணமாக இன்று முதல் அடுத்தமூன்று நாட்களுக்கு  ரத்து செய்யப்படுகிறது.

வ.எண். 12695 : சென்னை சென்ட்ரல்  – திருவனந்தபுரம்

வ.எண். 12686 : சென்னை சென்ட்ரல்  – மங்களூர் எக்ஸ்பிர1

வ.எண். 12623 சென்னை சென்ட்ரல்  –  திருவனந்தபுரம் மெயில்

வ.எண். 06037 சென்னை சென்ட்ரல்  – எர்ணாகுளம் சிறப்பு ரயில்

வ.எண். 22637  சென்னை சென்ட்ரல்  –  மங்களூர் வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ்

வ.எண். 12696 திருவனந்தபுரம் – சென்னை சென்ட்ரல் எகஸ்பிரஸ்

வ.எண். 12624 Tதிருவனந்தபுரம் – சென்னை சென்ட்ரல் மெயில்

வ.எண்.12626 திருவனந்தபுரம் – சென்னை சென்ட்ரல் கேரளா எகஸ்பிரஸ்

வ.எண். 22640  ஆழப்புலா – சென்னை சென்ட்ரல்

வ.எண். 12602 மங்களூர் – சென்னை சென்ட்ரல் மெயில்

வ.எண். 12686 மங்களூர் – சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ்

வ.எண். 22638 மங்களூர் – சென்னை சென்ட்ரல் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ்

இதையடுத்து, ஏற்கனவே ரயில் பயணத்திற்கு முன்பதிவு செய்தவர்கள், பணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவித்து உள்ளது.  செப்டம்பர் 15ம் தேதி வரை பயணிகள் எஎந்தவொரு நிலையத்திலும்  பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்து உள்ளது.