கேரள தங்கக்கடத்தல் வழக்கு: முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக கோரி பாஜக போராட்டம்…

திருவனந்தபுரம்: கேரள தங்கக்கடத்தல் வழக்கில் முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக கோரி  கேரளாவில் பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில் முதல்வரின் முன்னாள் முதன்மைச்செயலர் சிவசங்கரன்,  மாநில கம்யூனிஸ்டு தலைவர் கொடியேரி பாலகிருஷ்ணனின் மகன் பீனிஷ் கொடியேரி ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், மாநில முதல்வர் பினராயி விஜயன் பதவி விலகவேண்டும் என பாஜக, காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது. இன்று மாநிலம் முழுவதும் பாஜவினர் போராட்டத்தில் குதித்தனர்.

போராட்டம் நடத்திய பாஜகவினரை போலீசார் தடியடி நடத்தி அடித்து கலைத்தனர். பல இடங்களில் வஜ்ரா வாகனம் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து பாஜகவினரை கலைத்தனர். இதனால் பல இடங்களில் பரபரப்பு நிலவியது.