கொச்சி: தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேசின் ஜாமீன் மனுவின் மீது நடைபெறும் விசாரணையை வரும் 13ம் தேதிக்கு கொச்சி நீதிமன்றம் ஒத்தி வைத்து உள்ளது.

ஐக்கிய அரசு அமீரகத்தில் இருந்து கேரளாவுக்கு 30 கிலோ தங்கம் கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
கடத்தலின் பின்னணியில் தூதரகத்தில் அங்கு பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ் செயல்பட்டுள்ளார் என்பது தெரிய வந்தது.  பின்னர் என்.ஐ.ஏ. அதிகாரிகளால் ஸ்வப்னா பெங்களூருவில் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.  ஸ்வப்னா சுரேஷ், திருச்சூர் மாவட்டத்தில் விய்யூரில் உள்ள மத்திய சிறைச்சாலையில் உள்ளார். வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.  அதன் மீதான விசாரணையை கொச்சி நீதிமன்றம் வரும் 13ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.