திருவனந்தபுரம்:
கேரளா தங்க கடத்தல் வழக்கு தொடர்பாக மத்தியஅரசுஉடனே விசாரிக்க வலியிறுத்தி  பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா பரபரப்பு கடிதம் எழுதிஉள்ளார். அதில், இந்த கடத்தல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளார்.

கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் ஜூலை 4ம் தேதி சுங்கத் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட தூதரகம் பெயரில் வந்த பார்சலில் சுமார்  30 கிலோ தங்கம் கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.  இது தொடர்பாக முதல்வரின் முதன்மைச் செயலாளர் சிவகங்கரன பதவி நீக்கப்பட்டுஉள்ளதுடன், இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட ஐடி துறை பெண் அதிகாரி ஸ்வப்பான சுரேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப் பட்டு இருப்பதுடன் தங்கம் கடத்தலுக்கு அவருக்கு மூளையாக செயல்பட்டதும் தெரிய வந்துள்ளது.
இதைத்தொடர்ந்து, கேரள மாநில காங்கிரஸ் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான  ரமேஷ் சென்னிதாலா, பினராயி அரசு மீது கடுமையாககுற்றம் சாட்டினார். குற்றம்சாட்டப்பட்டவருக்கும் கேரளாவின் ஐடி முதன்மை செயலாளர் சிவசங்கருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டியவர், கடத்தல் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து ரமேஷ் சென்னிதாலா  பிரதமர் நரேந்திர மோடிக்கு  கடிதம் எழுதி உள்ளார்.
அதில், தங்கம் கடத்தல் விவகாரத்தில் ஐக்கிய அரபு அமிரகத்தின் பெயர் தவறாக பயன்படுத்தப் பட்டுள்ளது, இது “இந்தியாவின் தேசிய பாதுகாப்பில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும் இந்த மோசமான செயல். இந்த கடத்தல் விவகாரத்து  குறித்து விசாரிக்க உங்கள் உடனடி தலையீட்டை நான் கேட்டுக்கொள்கிறேன்.
“இந்த கடத்தல் வழக்கில் முக்கிய குற்றம் சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கேரள அரசால் நியமிக்கப் பட்டுள்ளார், அவருக்கு எதிரான மாநில புலனாய்வு அறிக்கைகளை புறக்கணித்து, அவருக்கு எதிரான விசாரணையை கேரள காவல்துறையின் குற்றப்பிரிவு தொடங்கவில்லை”  என்று குறிப்பிட்டிருப்பதுடன,  இது “கேரள முதல்வரின் அலுவலகத்தில் உள்ள முக்கிய அதிகாரிகள் தொடர்பு கொண்டிருப்பது நிரூபிக்கிறது”.
இந்த கடத்தல் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி உண்மைகள் வெளிக்கொணர வேண்டும்  என்றும் கூறியுள்ளார்.