திருவனந்தபுரம்:
கேரளாவில் உள்ள அரபு தூதரகம் பெயரில் தங்கம் கடத்தல் நடைபெற்று வந்தது தெரிய வந்துள்ள நிலையில், அதில் தொடர்புடைய கேரள  சட்டப்பேரவைத் தலைவரை  உடனே பதவி நீக்க வலியுறுத்தி முஸ்லிம் லீக் நோட்டீஸ் கொடுத்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் கேரளாவுக்கு  ரூ.15 கோடி மதிப்பிலான  30 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்ட விவகாரம் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடா்பாக , முதல்வரின் தனிச்செயலாளர் உள்பட மாநில அரசு துறையில் மக்கள் தொடா்பு அதிகாரியாக பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்ட 4 போ மீது தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அவர்கள் அனைவரும் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒருவரின் கடை திறப்பு விழாவில், கேரள மாநில சட்டப்பேரவைத் தலைவா் ஸ்ரீராமகிருஷ்ணன் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. இதனால், இந்த விவகாரத்தில் அவருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று கூறும், இந்திய யூனியன் முஸ்லிம், அவரை  பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.உமா், சட்டப்பேரவைச் செயலரிடம்   நோட்டீஸ் வழங்கி உள்ளார்.
இதனால் தங்கக்கடத்தல் விவகாரம் மேலும் சூடுபிடித்துள்ளது.