பெண் பத்திரிகையாளர்கள் சபரிமலை செல்ல கேரள காவல்துறை அனுமதி

பம்பா:

சபரிமலை கோவிலுக்கு செய்தி சேகரிக்க பெண் பத்திரிகையாளர்களை அனுப்ப வேண்டாம் என சபரிமலை போராட்டக்குழுவினர் பத்திரிகைகள் அலுவலகங்களுக்குகடிதம் எழுதி உள்ள நிலையில்,  பம்பையிலிருந்து சன்னிதானம் செல்ல பத்திரிகையாளர்களுக்கு கேரள காவல்துறை அனுமதி அளித்து உள்ளது.

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் வரலாம் என்று உச்சநீதி மன்றம் தீர்ப்புக்கு  மாநிலத்தில் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. இதன் காரணமாக பல இடங்களில் போராட்டக்கார்கள் சபரிமலை கோவிலுக்கு வந்த பெண்களை அடித்து விரட்டினார். இதன் காரணமாக பல பகுதிகளில் பதற்றம் நிலவியது.

கடந்த ஐப்பசி மாத கோவல் நடை திறப்பின் போது சபரிமலைக்கு வந்த பெண்களில் சில  பெண் செய்தியாளர்களும் வர முயற்சி செய்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில், இன்று மாலை  சபரிமலை அய்யப்பன் கோவில்  நடை திறப்பு முன்னிட்டு, சபரிமலை கர்ம சமிதி என்னும் போராட்ட அமைப்பின் தலைவர் குமார் பத்திரிகை அலுவலகங்களுக்கு கடிதம் எழுதி உளார்.

அதில், சபரிமலை  விவகாரத்துக்கு காரணம் மாநில அரசின் பிடிவாதம்தான். பல வருடங்களாக கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறையை மாற்ற அரசுக்கு அதிகாரமில்லை. அதனால் செய்தி நிறுவனங்கள், செய்தியாளர்களாக  இளம்பெண்களை சபரிமலைக்கு  அனுப்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். இளம்பெண் செய்தியாளர்கள் வருவதால் நிலைமை மோசமாகும் என நாங்கள் கருதுகிறோம். அதனால் இந்த விவகாரத்தில் நீங்கள் எங்களுடைய நிலைமைய புரிந்துக் கொண்டு பெண் செய்தியாளர்களை அனுப்ப வேண்டாம் என்றும், எங்களின் கோரிக்கையை ஏற்று எங்களுக்கு உதவ வேண்டும் என எழுதியிருந்தது.

இந்த நிலையில், பெண் பத்திரிகையாளர்கள் சபரிமலை செல்ல கேரள அரசும், காவல்துறையும் அனுமதி வழங்கி உள்ளது.

மேலும், பெண்கள் சபரிமலைக்குள் நுழைய முயன்றால் போராட்டம் வெடிக்கும் என்பதால் சபரிமலை சன்னிதானத்தில் முதல் முறையாக பெண் காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதில், 50 வயதிற்கு மேற்பட்ட 15 பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள னர்.
இதன் காரணமாக மீண்டும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.