கேரளாவில் கறி சோறுடன் வழங்கப்படும் மதிய உணவுத் திட்டம்! தமிழகஅரசின் கவனத்திற்கு….

சென்னை:

மிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மதிய உணவு திட்டங்களைப் பார்த்து பல மாநிலங்களும் மதிய உணவு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஆனால், தமிழகத்தை விட சிறப்பாக அந்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப் பட்டு வருகின்றன. இது அந்த மாநில மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கேரள மாநிலத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் மதிய உணவு திட்டத்தில் பல்வேறு வகையான சுவைமிகுந்த சாப்பாடுடன் கறி, பாயாசம் போன்றவைகளும் வழங்கப்பட்டு வருகின்றன… இதுபள்ளி மாணவர்கள் மத்தியிலும்,பெற்றோர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழகத்தில் ஏழை எளிய மக்களும் கல்வி கற்கும் நோக்கில் அவர்களை பள்ளிக்கு வருவதை உறுதி செய்யும் வகையில், முதன்முதலாக அவரது ஆட்சியின்போது மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த திட்டம் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் மெருகூட்டப்பட்டு  சத்துணவு திட்டமாக மாற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து ஆட்சிக்கு வந்த கருணாநிதி, குழந்தைகளுக்கு தினசரி முட்டை வழங்க உத்தரவிட்டார். பின்னர் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா,  மதிய உணவு தினசரி ஒவ்வொரு வகையான சாதங்களாக போட உத்தரவிட்டார்.

ஆனால், தற்போது மதிய உணவு திட்டம் ஏதோ சம்பிரதாயத்துக்காக நடைபெற்று வருகிறது. உணவுகள் சுவை யில்லாமலும், தினசரி வழங்கப்படும் அவித்த முட்டை வாடை வீசுவதாலும் பெரும்பாலான குழந்தைகள் பள்ளிகளில் மதிய உணவு சாப்பிடுவதை தவிர்த்து வருகின்றனர்…

ஆனால்,கேரள அரசு பள்ளிக்குழந்தைகளுக்கு விதவிதமான சத்துமிக்க உணவுகளை குழந்தைகளுக்கு வழங்கி வருகிறது…. படிக்கும் குழந்தைகள் ஆரோக்கியத்துடன் வளரத் தேவையான உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒருநாள் தேங்காய் சாதம், மற்றொரு நாள் வேறு வகையான சாதம் உள்பட காய்கறி சாலட், அத்துடன் சிக்கன் கறி மற்றும் பால் பாயாசம் போன்றவைகளும் வழங்கப்படுகின்றன. இது பள்ளிக் குழந்தைகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது…

சத்துணவு திட்டங்களுக்கு முன்னோடியாக இருந்த வந்த தமிழகத்தில், அதை ஒழுங்ககாக நடைமுறைப் படுத்தப்படுவது இல்லை… ஜெ முதல்வராக இருக்கும்போது,  குழந்தைகளுக்கு முட்டையை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையாக தயாரித்து வழங்க உத்தரவிடப்பட்டது. ஆனால், எந்தவொரு சத்துணவு அமைப்பாளரும் அதுபோன்ற நடவடிக்கை எடுக்காமல், கெட்டுப்போன முட்டைகளுடன் நல்ல முட்டைகளையும் சேர்த்து  அவித்து, அப்படியே குழந்தைகளுக்கு வழங்கி வருகின்றனர். இதை பெரும்பாலான குழந்தைகள் சாப்பிட மறுத்து விடுவதால், அந்த அவித்த முட்டைகள் அனைத்தும் திருட்டுத்தனமாக டாஸ்மாக் பாருக்கு விற்பனையாகி  வருகிறது…

இதற்கிடையில், காலை உணவு திட்டத்தையும் அக்ஷய பாத்ரா என்ற இந்து அமைப்பிடம் ஒப்படைத்துள்ளது. அந்த அமைப்பு பூண்டு, வெங்காயம் சேர்க்காமல் உப்புசப்பில்லாத உணவை வழங்க இருக்கிறது…..

தமிழகஅரசு அண்டை மாநிலங்களைப் பார்த்தாவது,  இனிமேலாவது பள்ளிக்குழந்தைகளுக்கு உண்மையான சத்துணவை வழங்குமா?