ஐய்யப்பன் பக்தர்களுக்காக சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது கேரள அரசு

திருவனந்தபுரம்,

பிரசித்தி பெற்ற அய்யப்ப கோவில் மண்டலபூஜை தொடங்கி உள்ளதால், நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து சபரிமலைக்கு படையெடுத்து வருகின்றனர்.

இதன் காரணமாக பஸ், டிரெயின்களில் டிக்கெட் கிடைக்காமல் பலர் அவதியுறுகின்றனர்.

இந்நிலையில், அ ப்பன் பக்தர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம் கேரள அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, மகர விளக்கு மற்றும் மண்டல பூஜைக்காக சபரிமலை வரும் பக்தர்களின் வசதிக்காக, சபரிமலையில் இருந்து கோவை, மதுரை, சென்னை உள்பட முக்கிய நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மேலும், 40 பக்தர்கள் மொத்தமாக இணைந்து சபரிமலைக்கு தேவையென கேட்டால், அவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் தனிபேருந்துகள் இயக்கவும் தயாராக இருப்பதாக கேரள போக்குவரத்து துறை அறிவித்து உள்ளது.