கேரள அரசின் அடுத்த அதிரடி : ரூ 1500 க்கு மேல் மின்கட்டணம் செலுத்தினால் ரேஷன் கிடையாது!

 

திருவனந்தபுரம்

ரூ 1500க்கு மேல் மின்கட்டணம் செலுத்துபவர்களுக்கும் 4 சக்கர வாகனங்களின் உரிமையாளர்களுக்கும் ரேஷன் பொருட்களை நிறுத்த உத்தேசித்துள்ளது.

கேரள அரசு ஏற்கனவே அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஆதார் கார்ட் இருந்தால்தான் சம்பளம் வழங்கப்படும் என உத்தரவிட்டது தெரிந்ததே.  இப்போது மேலும் ஓர் அதிரடி நடவடிக்கையை எடுக்க உள்ளது.

இனிமேல் மாதம் ரூ. 1500ம், அதற்கு மேலும் மின் கட்டணம் செலுத்துவோருக்கும், நான்கு சக்கர வாகனங்களின் உரிமையாளர்களுக்கும் இனி ரேஷன் பொருட்கள் வழங்கப்படமாட்டாது. அரிசி மட்டும் வாங்க அனுமதி உண்டு.  மற்ற பொருட்கள் எதுவும் கிடைக்காது.  வெகு விரைவில் இது அமல் படுத்தப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது.