மது விலை குறைப்பு.. உறுதியளிக்கும் கேரள அரசு..

--

மது விலை குறைப்பு.. உறுதியளிக்கும் கேரள அரசு..

ஊரடங்கு காரணமாக மற்ற மாநிலங்களுடன் சேர்த்து கேரளாவிலும் மதுக்கடைகள் மூடப்பட்டன.

பல மாநிலங்கள் மதுக்கடைகளைத் திறந்துள்ள நிலையில், மது விற்பனைபற்றி முதன் முதலில் பேச ஆரம்பித்த கேரளாவில் இன்னும் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை.

எனினும் மது விலையும், மது மீதான வரியும் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த கேரள கலால் துறை அமைச்சர் டி.பி.ராமகிருஷ்ணன்’’ கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக மது விலை உயர்த்தப்பட்டுள்ளது. இன்னும் 3 மாதங்களில் அதன் விலை குறைக்கப்படும். அதுபோல் மது மீதான வரியும், பொருளாதார சிக்கல் சீரடைந்த பின்னர் குறைக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.

‘’விரைவில் மதுக்கடைகள் திறக்கப்படும் ‘’ என்று குறிப்பிட்ட அமைச்சர்’’ மதுக்கடைகளில் நெரிசலைக் கட்டுப்படுத்த ஆன்லைன் மூலம் மது ஆர்டர் செய்யலாம்.. அப்போது கொடுக்கப்படும் ஈ- டோக்கனை காண்பித்து மதுக்கடை மற்றும் பார்களில் மது வாங்கலாம்’’ என்று கூறினார்.

– ஏழுமலை வெங்கடேசன்