திருவனந்தபுரம்

றவைக் காய்ச்சலால் இழப்புற்ற பறவைப் பண்ணை உரிமையாளர்களுக்குக் கேரள அரசு இழப்பீடு அறிவித்துள்ளது.

தற்போது இந்தியாவில் பறவைக் காய்ச்சல் மிக வேகமாகப் பரவி வருகிறது.  குளிர் காலத்தில் வெளி நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பறவைகளால் இந்த காய்ச்சல் ஏற்படுவதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது,.   நாட்டில் அதிக அளவில் பறவைக் காய்ச்சல் உள்ள மாநிலங்களில் கேரளாவும் ஒன்றாகும்.

மத்திய அரசு பறவைக்காய்ச்சல் அதிகம் உள்ள இடங்களில் எடுக்க வேண்டிய கட்டுப்பாடு நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தல்கள் வழங்கி உள்ளது.  அதன்படி இம்மாதம் 5 ஆம் தேதி முதல் கேரளாவில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.  நோய்ப் பாதிப்பு உள்ள பகுதிகளில் இருக்கும் பறவைகள் கொன்று புதைக்கப்படுகின்றன.

இந்நிலையில் பறவைக்காய்ச்சலால் பாதிப்பு அடைந்துள்ள பறவைப் பண்ணை உரிமையாளர்களுக்குக் கேரள அரசு இழப்பீடு வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.,   அதன்படி 2 மாதங்களுக்கு மேல் வயதான பறவைகள் இழப்புக்கு தலா ரூ.200 மற்றும் ஒரு மாதத்துக்கும் குறைவான வயதுடைய பறவைகள் இழப்புக்கு தலா ரூ.100 என இழப்பீடுகள் வழங்கப்பட உள்ளன.