சபரிமலை தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு இல்லை: கேரள முதல்வர் உறுதி

--

திருவனந்தபுரம் :

பரிமலை தொடர்பான உச்சநீதி மன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட மாட்டாது என்று கேரள முதல்வர் பிரனாயி விஜயன் உறுதிப்பட தெரிவித்து உள்ளார்.

அனைத்து வயது பெண்களும் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லலாம் என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இதற்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், உச்சநீதி மன்ற  தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது தொடர்பாக சபரிமலை  தேவசம் போர்டு உறுப்பினர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள்  அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு நாடு முழுவதும் உள்ள இந்துக்களிடையே கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. கேரளாவிலும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இந்த நிலையில், கேரள அரசு தீர்ப்பு குறித்து மேல்முறையீடு செய்யாது என்று அறிவித்து உள்ளது.

சபரிமலை வழக்கில் கேரள அரசு சார்பில்   சீராய்வு மனு தாக்கல் செய்யப்படாது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சபரிமலைக்கு வரும் பெண்கள் தடுத்து நிறுத்தப்படமாட்டார்கள் என்று தெரிவித்த அவர், சபரிமலைக்கு வரும் பெண்களின் பாதுகாப்பும் வசதியும் உறுதி செய்யப்படும் என்றும் கூறி உள்ளார்.

சபரி மலைக்கு வரும் பெண்களின் பாதுகாப்புக்கு கேரள மற்றும் அண்டை மாநில பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர் என்றும்  விளக்கம் அளித்துள்ளார்.