கேரளாவில் நிபா வைரஸ் முழுவதுமாக அழிப்பு : அரசு அறிவிப்பு

திருவனந்தபுரம்

கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதல் இல்லை என அரசு அறிவித்துள்ளது.

கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலில் சுமார் 10 க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்தனர்.   அதை ஒட்டி கேரளாவில் இருந்து நிபா வைரஸ் நாடெங்கும் பரவக் கூடும் என்னும் அச்சத்தில் கேரளாவில் பல கட்டுப்பாடுகள் போடப்பட்டன.

தற்போது அரசு அறிவிப்பு ஒன்றை அளித்துள்ளது.  ”கேரளாவில் பயணம் செய்வோருக்கான சுகாதார ஆலோசனை” என்னும் தலைப்பில்  உள்ள அந்த அறிவிப்பில், “கேரளா மாநிலத்தில் அடுத்தடுத்து நிபா வைரஸ் தாக்க்கி வந்ததால் நாங்கள் கேரளாவில் பயணம் செய்வொருக்கு பல முன்னெச்சரிக்கை ஆலோசனைகளை வழங்கினோம்.   கடந்த 21 நாட்களாக எந்த ஒரு நோயாளியும் கண்டறியப்படாததால் நாங்கள் கேரளாவில் நிபா வைரஸ் அடியோடு அழிக்கப்பட்டுள்ளது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதனால் கேரளாவில் பயணம் செய்வோருக்கான ஆலோசனைகளை திரும்பப் பெறுகிறோம்.   இனி கேரளாவில் பயணம் செய்வது  பாதுகாப்பானது”  என கூறப்பட்டுள்ளது.