சபரிமலை : சரண கோஷத்துக்கு உயர்நீதிமன்றம் அனுமதி

திருவனந்தபுரம்

பரிமலை கோவிலில் பக்தர்கள் சரண கோஷம் எழுப்ப கேரள உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.


சபரிமலை கோவிலில் பக்தர்கள் குழுவாக சென்று தரிசிப்பதும், 18 ஆம் படி ஏறும் போதும், சன்னிதானத்தில் தரிசனத்தின் போதும் சாமியே சரணம் ஐயப்ப்பா என கோஷம் எழுப்புவது வழக்கம். தற்போது கேரள அரசு அவ்வாறு கோஷமிடக் கூடாது என தடை விதித்துள்ளது. அத்துடன் சபரிமலை மற்றும் சுற்றுப்புற இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.

கேரள உயர்நீதிமன்றத்தில் இந்த உத்தரவுகளை எதிர்த்து பலர் மனு அளித்தனர். அந்த மனுக்களை நீதிபதிகள் ராமச்சந்திர மேனன் மற்றும் அனில்குமாரின் அமர்வு விசாரணை செய்தது. விசாரணை முடிவில் அரசின் உத்தர்வுக்கு உயர்நீதிமன்ற அமர்வு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

அந்த தடை உத்தரவில், “சபரிமலை ஐயப்பன் கோவிலில் சாமியே சரணம் ஐயப்பா என கோஷமிடுவதில் எவ்வித தவறும் கிடையாது. காவல்துறையினர் சரண கோஷம் போட தடை விதிக்கக்கூடாது., அத்துடன் கோவிலுக்கு குழுவாக செல்லலாம். சபரிம்லைக்கு வருபவர்க்ளில் பக்தர்களையும் போராட்டக்காரர்களையும் எவ்வாறு காவல்துறையினர் வேறுபடுத்தி பார்க்கின்ற்ன்ர் என வியப்பாக உள்ளது.

கேரள அரசின் அரசு வழக்கறிஞர் சன்னிதானத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்ததற்கான காரணங்கள் குறித்து ஆவணங்களை உடனடியக தாக்கல் செய்ய வேண்டும். அத்துடன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காரணங்களை பட்டினம் திட்டா மாவட்ட ஆட்சியர் விளக்க வேண்டும்.

குற்றப் பின்னணி கொண்ட காவல் துறை அதிகாரிகளை கூட்டத்தை கட்டுப்படுத்த அனுப்பியது யார்? அவர்க்ளுக்கு உள்ளூர் மொழியான மலையளம் தெரியுமா? தெரிந்திருந்தால் அவர்கள் சரணம் ஐயப்பா என்னும் கோஷத்தை எவ்வாறு குற்றமாக கருதுகிறார்கள்?” என அரசுக்கு அமர்வு சரமாரியாக கேள்விகள் எழுப்பி உள்ளது.