மாநிலங்களவை தேர்தல் தேதி வாபஸ் : காரணம் கேட்கும் கேரள உயர்நீதிமன்றம்

திருவனந்தபுரம்

கேரள மாநிலத்தில் மாநிலங்களவை தேர்தல் தேதியைத் திரும்பப் பெற்றதற்க்கு தேர்தல் ஆணையத்திடம் கேரள உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.

வரும் ஏப்ரல் 21 ஆம் தேதியுடன் கேரளாவில் 3 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது.  இதையொட்டி ஏப்ரல் 12 ஆம் தேதி அன்று தேர்தல் நடத்த உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.  ஆனால் அந்த அறிவிப்பை ஆணையம் திரும்பப் பெற்றது.

இது குறித்து மத்திய சட்டத்துறை பரிந்துரையின் அடிப்படையில் தேர்தல் தேதி திரும்பப் பெறப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.   இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள மாநில செயலர் எஸ் சர்மா கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.   இந்த மனுவைக் கேரள உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.

இந்த விசாரணையில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட தேர்தல் தேதியை திரும்பப் பெற்றது ஏன் என எழுத்து பூர்வ விளக்கம் அளிக்குமாறு கேரள நீதிமன்றம்  தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்டுள்ளது.  இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.   இந்நிலையில் உறுப்பினர்கள் ஓய்வுக்கு முன்னர் தேர்தல் அறிவிப்பை வெளியிட உள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.