திருவனந்தபுரம்,

கேரளாவில் அரசு சார்பாக மது விற்பனை நடைபெற்று வருகிறது. மதுவை வாங்கள் குடிமக்கள் வரிசையில் நிற்பதால், அந்த பகுதியில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுவதாக பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு கேரள உயர்நீதி மன்றம் நீதிபதி தேவன் ராமச்சந்திரன் தலைமையிலான  அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் கேரள மாநில பிவரேஜஸ் கார்ப்பரேஷனுக்கு  கடும் கண்டனங்களை தெரிவித்தது.

மதுவை வாங்க வருபவர்கள் கடைகளுக்கு வெளியே நிற்காதவாறு நடவடிக்கை எடுக்க அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் கேரள அரசு வெளிநாட்டு மதுபானங்களை விற்பனை செய்ய தரமான கடைகளை நடத்தி வருகிறது. அதுபோல மதுபானங்கள் வாங்க வருபவர்கள் வெளியே வரிசையால் நிற்காதவாறு மாற்று ஏற்பாடுகளை செய்ய உத்தரவிட்டு உள்ளது.

மேலும், மதுபான கடைகளை நடத்துவதும், குடியிருப்பு அல்லது வணிக ரீதியிலான பகுதிகளில் விற்பனை செய்வதற்கு கண்டனமும் தெரிவித்த நீதிபதிகள், மதுபிரியர்களால்,  மக்களுக்கு தொல்லை கொடுப்பது தெரிய வந்தால், துறை அதிகாரிகள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

மதுபானத்தை வாங்குவதற்கு,  மதுபிரியர்கள் நீண்ட நேரம் வரிசைகளில் நிற்பதை சுட்டிக்காட்டிய உயர்நீதி மன்ற அமர்வு, அதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கவும்,   வாடிக்கையாளர் மதுபானத்தை வாங்குவதற்கு வெளியே நிற்கும் விதத்தை நிறுத்துமாறு சம்பந்தப்பட்ட துறையினரை கேட்டுக் கொண்டனர்.

மேலும், மதுபானம்  வாங்குவதற்காக மக்களுக்கு போதுமான காத்திருப்புப் பகுதியை உருவாக்கு மாறும் உத்தரவிட்டுள்ளது.

மதுப்பிரியர்களால்  சட்டம் ஒழுங்கு பராமரிக்கப்படுவதை தடுக்கும் வகையில்  சப்.இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசாரை நியமிக்கும்படியும் அறிவுறுத்தி உள்ளது.