சபரிமலை : காவல்துறைக்கும் மாநில அரசுக்கும் உயர்நீதிமன்றம் கண்டனம்

திருவனந்தபுர்ம்

பரிமலை ஐயப்பன் கோவில் விவகாரத்தில் கேரள மாநில அரசுக்கும் காவல்துறைக்கும் கேரள உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கேரள மாநிலம் சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிக்க உச்சநீதிமன்ற அனுமதியை எதிர்த்து தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. தீர்ப்புக்குப் பின் இருமுறை நடை திறக்கப்பட்டது. அப்போது அங்கு வந்த இளம்பெண்கள் போராட்டக்காரர்களால் திருப்பி அனுப்பப் பட்டனர். தற்போது மண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறக்கப்பட்டுள்ளது.

எப்போதும் இல்லாத அளவுக்கு சபரிமலையில் 15000 காவல்துறையினர் குவிக்கப்பட்டுளனர். அத்துடன் முன்பு போல நள்ளிரவில் மலை ஏறவும் சபரிமலை நடைப்பந்தலில் தங்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையும், இரவு 9 மனி முதல் அதிகாலை 2 மணி வரையும் பக்தர்கள் மலை ஏறக்கூடாது என அறிவிக்கப்பட்டுளது.

பல பக்தர்கள் இரவு மலை ஏறி நடைப்பந்தலில் தங்கி விட்டு விடியற்காலை தரிசனம் செய்வது வழக்கம். ஆனால் தற்போது நடைப்பந்தலில் தண்ணீரை ஊற்றி யாரையும் தங்கவிடாமல் செய்யப்பட்டுள்ளது. மீறி தங்கிய சிலரை காவல்துறையினர் கைதுசெய்து வலுக்கட்டாயமாக மலையை விட்டு அனுப்பி உள்ளனர். இதை ஒட்டி பாஜகவினர் கேரள முதல்வர் இல்லத்தின் முன்பு போராட்டம் நடத்தினர்.

சபரிமலையில் நேரக்கட்டுப்பாடு போடப்பட்டது குறித்தும் காவல்துறையினரின் கெடுபிடி குறித்தும்கேரள உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த உயர்நீதிமன்றம் அம்மாநில காவல்துறைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அத்துடன் இவ்வளவு காவல்துறையினரை ஏன் மாநில அரசு குவித்துள்ளது எனவும் கேட்டுள்ளது. அனைத்து நேரங்களிலும் பக்தர்கள் சபரிமலை ஏற அனுமதி அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் கூறி உள்ளது.

கார்ட்டூன் கேலரி