முஸ்லிம் லீக் எம்எல்ஏ ஷாஜி தகுதி நீக்கம்: கேரள உயர்நீதி மன்றம் அதிரடி

திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஷாஜி எம்எல்ஏ கேரள உயர்நீதி மன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட கேரள எம்எல்ஏ

தேர்தல் நேரத்தின்போது, வகுப்புவாத பிரசாரம் செய்து வெற்றி பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், அவரது வெற்றியை ரத்து செய்து கேரள உயர் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கி உள்ளது.

கேரளாவின் வடக்கு கண்ணூர் மாவட்டத்தில் அழிக்கோடு சட்டமன்ற தொகுதியில் கடந்த 2016ம் ஆண்டு சட்ட மன்ற தேர்தலின்போது சிபிஎம் வேட்பாளர் நிகேஷ் குமாரை எதிர்த்து, முஸ்லிம் லீக் கட்சி சார்பில் ஷாஜி போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார்.

ஷாஜியின் வெற்றியை ரத்து செய்ய கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணையின் போது,  தேர்தல் சமயத்தில் ஷாஜி, வகுப்புவாத ரீதியிலான பிரசாரங்கள் மற்றும் அது தொடர் பான போஸ்டர்கள் ஒட்டப்பட்டதாக விசாரணையின்போது ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து இந்த வழக்கில் இன்று கேரள உயர்நீதி மன்ற அமர்வு அதிரடி தீர்ப்பு வழங்கியது. அதில், ஷாஜி வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவித்தது.

மேலும், அழிக்கோடு தொகுதியில் மீண்டும் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தர விட்டது. அத்துடன்  ஷாஜி ரூ.50 ஆயிரம் ரூபாயை தோற்கடிக்கப்பட்ட வேட்பாளருக்கு செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

கேரள உயர்நீதி மன்ற உத்தரவை எதிர்த்து ஷாஜி சார்பில் உச்சநீதி மன்றத்தில் மேல்முறை யீடு செய்யப்போவதாக கூறப்பட்டுள்ளது.

கேரள உயர்நீதி மன்ற தீர்ப்புக்கு கேரள முஸ்லிம் லீக் தலைவர் குஞ்சாலிகுட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.