கார் மோதி பத்திரிக்கையாளர் உயிரிழப்பு: ஐ.ஏ.எஸ் அதிகாரி ஸ்ரீராம் வெங்கடராமன் கைது

கேரளாவில் தான் ஓட்டி வந்த கார் மோதி பத்திரிகையாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில், ஐ.ஏ.எஸ் அதிகாரி ஸ்ரீராம் வெங்கடராமன் கைது செய்யப்பட்டார்.

கேரளாவில் கார் மோதியதில் பைக்கில் வந்த பத்திரிகையாளர் முகமது பஷீர் படுகாயம் அடைந்து உயிரிழந்தார். இது தொடர்பாக காரை ஓட்டி வந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஸ்ரீராம் வெங்கடராமனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அதிவேகமாக காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக, ஐ.ஏ.எஸ். அதிகாரி ஸ்ரீராம் வெங்கட்ராமன் கைது செய்யப்பட்டார்.  கார் விபத்தை ஏற்படுத்திய ஐ.ஏ.எஸ். அதிகாரி குடிபோதையில் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

முகமது பஷீரின் மறைவுக்கு முதல்வர் பினராயி விஜயன், எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட்டு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கேரள பத்திரிகையாளர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.