Random image

பலாத்காரம் செய்யப்பட்ட கன்னியாஸ்திரியை தவறாக பேசும் சர்ச்சை எம் எல் ஏ

திருவனந்தபுரம்

பேராயரால் பலாத்காரம் செய்யப்பட்ட கன்னியாஸ்திரியை குறித்து தவறாக கேரள சட்டப்பேரவை உறுப்பினர் ஜார்ஜ் பேசியது கடும் சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.

கேரளாவை சேர்ந்த சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் ஜார்ஜ்.    இவர் அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்வ்து வழக்கம்.   சில மாதங்களுக்கு முன்பு ஒரு புகழ் பெற்ற நடிகை காரில் கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டார்.   அப்போது வெளிப்படையாக  நடிகையின் பெயரைக் குறிப்பிட்டும் அந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட நடிகர் திலிப்புக்கு ஆதரவாகவும் பேசினார்.

சமீபத்தில் பேராயர் ஃபிரான்கோ முலக்கல் என்பவர் தம்மை இரு வருடங்களில் 13 முறை பலாத்காரம் செய்ததாக ஒரு கன்னியாஸ்திரி புகார் அளித்தார்.  அந்த புகாரின் அடிப்படையில் ஜலந்தரை சேர்ந்த அந்த பேராயர் மீது காவல்துறை வழக்கு பதிந்துள்ளது.   இந்நிலையில் சட்டப்பேரவை உறுப்பினர் ஜார்ஜ் இது குறித்து ஊடகவியல் ஆர்வலர்களுடன் இது குறித்து பேசி உள்ளார்.

அப்போது ஜார்ஜ், “கடந்த 2 வருடங்களாக ஒருவருடன் பாலியல் உறவு வைத்துள்ள ஒரு கன்னியாஸ்திரியை எந்த பெயர் கொண்டு அழைக்க வேண்டும்? நான் விலைமாது என அழைப்பேன்.    அந்த பேராயர் குற்றமற்றவர் என நான் கூறவில்லை,  ஆனால் அவருடன் உறவு கொண்டுள்ள பெண்ணின் நடத்தையை என்ன சொல்வது?

அந்த கன்னியாஸ்திரி விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் அல்ல.    அவர் பேராயர் தன்னை 13 முறை பலாத்காரம் செய்ததாக கூறி உள்ளார்.   ஆனால் பேராயர் முதலில் 12 முறை பலாத்காரம் செய்யும் வரை ஒன்றும் சொல்லாமல் இருந்து விட்டு 13 ஆம் முறை மட்டும் ஏன் புகார் அளித்துள்ளார்.?

கன்னியாஸ்திரி என்பவர் கன்னித்தன்மையுடன் இருந்தாக வேண்டும்.   கன்னித்தன்மையை இழந்தவரை எவ்வாறு கன்னியாஸ்திரி என அழைக்க முடியும்?   அத்துடன் பேராயர் மீது வேறு சில கன்னியாஸ்திரிகளும் புகார் அளித்துள்ளனர்.   முதலில் அவர்கள் அனைவரையும் குறுக்கு விசாரணை செய்து உண்மையை கொண்டு வர வேண்டும்” என பேசி உள்ளார்.

அவரது இத்தகைய தரக்குறைவான உரை கேரள மக்களிடையே கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.