கேரள வெள்ளத்துக்கு கேரளாவே காரணம்!: தமிழக அரசு பதில் மனு

கேரள வெள்ளத்துக்கு தமிழகம் காரணம் என்று கேரள அரசு குற்றம் சாட்டுவதை மறுத்து, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்தில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து பதில் மனுத்தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில், இன்று கேரள அரசு சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், “ஆகஸ்ட் 14 ஆம் தேதி முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் வெகுவேகமாக உயர்ந்ததாகவும், அப்போது கேரள தலைமை செயலாளர், தமிழக தலைமை செயலாளரை தொடர்பு கொண்டு, உரிய நேரத்தில் படிப்படியாக தண்ணீரை திறக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். ஆனால், தமிழக அரசு அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

ஆகஸ்ட் 14 ஆம் தேதி 137 அடியாக இருந்த முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 15 காலை வேகமாக அதிகரித்த நிலையில், வினாடிக்கு 21 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது.

அதே நாள் காலை 8 மணி அளவில் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டதால், இடுக்கி அணையை முழுமையாக திறக்க வேண்டிய நிலை உருவானது.   தமிழக அரசு, உரிய முறையில் கட்டுப்பாட்டுடன் நீரை திறந்திருந்தால், இடுக்கி அணையில் இருந்து கூடுதலாக நீரை திறக்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்காது.

ஆகவே கேரள வெள்ளத்துக்கு தமிழ அரசும் முக்கிய காரணம்” என்று கேரள அரசு தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்ல் பதில் மனு தாக்கல் செய்தது. அதில், “இடுக்கி பகுதி வெள்ளத்துக்கு
கேரள அரசே காரணமே.. முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழகம் நீர் திறப்பதற்கு இரண்டு நாள் முன்பே, கேரள அதிகாரிகள் திறந்துவிட்டனர்.

முல்லைப்பெரியாறு அணையில் இறுந்து இடுக்கிக்கு 2 டி.எம்.சி. நீர் திறப்பதற்கு முன்பே  இடுக்கிகியில் இருந்து  14 டி.எம்.சி. நீரை கேரள அரசு திறந்துவிட்டது. ஆகவே வெள்ளத்துக்கு கேரள அரசே காரணம்” என்று தமிழக அரசு தனது பதில் மனுவில்தெரிவித்துள்ளது.