திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், இன்று காலை  முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.  இதுவரை (11 மணி நிலவரம்) வெளியான வாக்கு எண்ணிக்கையின்படி மாநிலத்தில் மாநிலத்தில் ஆளும் கம்யூனிஸ்டு கட்சி கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. பாஜக பின்னடையே சந்தித்து வருகிறது.

கேரளா மாநில  உள்ளாட்சி தேர்தல்  3 கட்டங்களாக நடத்த தேர்தல் அம்மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்து, அதற்கான தேதியையும் அறிவித்தது. அதனப்டி,  முதல் கட்ட தேர்தல் டிசம்பர் 8ம் தேதியும், 2வது கட்ட தேர்தல் டிசம்பர் 10ந்தேதியும், 3வது கட்ட தேர்தல் டிசைம்பர்  14ம் தேதியும் நடைபெற்றது. இன்று (டிசம்பர் 16) வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. மாநிலததில் உள்ள 6 மாநகராட்சிகள், 941 கிராம பஞ்சாயத்துகள், 14 மாவட்ட பஞ்சாயத்துகள் மற்றும் 87 நகராட்சிகள் உட்பட 1,200 உள்ளாட்சி சுயராஜ்ய அமைப்புகளில் மொத்தம் 21,893 வார்டுகளுக்கு இந்த தேர்தல்கள் நடைபெற்றது.

கேரள உள்ளாட்சி மன்றத் தேர்தலில் வாக்களிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை மாநிலத்தின் 244 மையங்களில் இன்று  நடைபெற்று வருகிறது.

காலை 11 மணி நிலவரப்படி,

கேரளாவில் 6 மாநகராட்சிகளில் 4ல் இடதுசாரிகளும், 2ல் காங்கிரஸ் கூட்டணியும் முன்னிலையில் உள்ளன.
86 நகராட்சிகளில் 39ல் இடதுசாரிகள், 38ல் காங்கிரஸ் கூட்டணியும், 2ல் பாஜகவும் முன்னிலையில் உள்ளன.

யுடிஎஃப் (United Democratic Front (Kerala) ஐக்கிய ஜனநாயக முன்னணி  17 டிவிசன்களில் முன்னிலை வகிக்கிறது,

எல்.டி.எஃப் (Left Democratic Front) எனப்படும்  இடது ஜனநாயக முன்னணி  எர்ணாகுளம் மாவட்ட பஞ்சாயத்து தேர்தலில் 6 இடங்களில் முன்னணியில் இருந்து வருகிறது. பாஜக பின்னடைவை சந்தித்துள்ளது.