கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் 3 கட்டங்களாக நடத்த முடிவு: தேதிகளையும் அறிவித்தது தேர்தல் ஆணையம்

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் 3 கட்டங்களாக நடத்த உள்ளதாக அம்மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கொரோனா காரணமாக நாடு முழுவதும் அனைத்து பணிகளும் பாதிக்கப்பட்டன. இப்போதுள்ள சூழலில் கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்துள்ளது.

இந்நிலையில் கேரளாவில் உள்ளாட்சி தேர்தலை நடத்த அம்மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்து இருக்கிறது அதன்படி டிசம்பரில் 3 கட்டங்களாக தேர்தல் அம்மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்து, அதற்கான தேதியையும் அறிவித்துள்ளது.

டிசம்பர் 8ம் தேதி முதல் கட்ட தேர்தலும், 10 மற்றும் 14ம் தேதிகளில் முறையே 2 மற்றும் 3ம் கட்ட தேர்தலும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. வாக்குகள் அனைத்தும் டிசம்பர் 16ம் தேதி எண்ணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.