Random image

கேரள சிறுமியின் சந்தனப்பொட்டு விவகாரம்: சமூக வலைதளங்களில் கடும் விமர்சனம்

திருவனந்தபுரம்:

ஸ்லாமிய மதத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் சந்தனபொட்டு வைத்த விவகாரத்தில், அந்த சிறுமியை, இஸ்லாம் மதத்தில் இருந்து மதரசா நீக்கிய விவகாரம் கடும் சர்ச்சையை எழுப்பி உள்ளது.

சமூக வலைதளங்களில் இதுகுறித்து கடுமையான விமர்சனமும் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

வடகேரளா மாநிலத்தை இஸ்லலாமிய சிறுமி ஒருவர்  குறும்படம் ஒன்றில் நடிப்ப தற்காக, சிறிது நேரம் தனது நெற்றியில் சந்தனத்தாலான பொட்டு வைத்துள்ளார். இதையறிந்த இஸ்லாமிய பழமைவாதிகள், அந்த சிறுமியை இஸ்லாம் மதத்தில் இருந்து நீக்குவதாக அறிவித்து உள்ளனர்.

இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளதோடு மட்டுமல்லால், கடுமையான விமர்சனத்தையும் எழுப்பி உள்ளது.

இந்த சம்பவம் குறித்து அந்த சிறுமியின் தந்தை உம்மர் மளயில்  தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில்,  தனது மகளின் புகைப்படத்துடன்,  எனது மகள் பெயர்  ஹென்னா. இவர் படிப்பு, பாட்டு, நடனம், நாடகம், நடிப்பு என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குபவர்.  

இவர் சமீபத்தில் ஒரு குறும்படத்திற்காக நெற்றியில் சந்தனப்பொட்டு வைத்து நடித்தார். இதற்காக அவளை மதரசாவிலிருந்து நீக்கியுள்ளனர். 

அதேவேளையில், அவர் மதரசா பொது தேர்வில் மாநில அளவில் 5 வது இடத்தை பிடித்தவர். நல்லவேளை, என் மகள் மீது கல்வீசி கொள்ளாமல் விட்டது நிம்மதி என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மதசாவின் இந்த செயல் நியாயமற்றது என்று இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த பலரும் கருத்து தெரிவித்து உள்ளனர்.

ஆயிரக்கணக்கானோர் இந்த சம்பவம் குறித்து இஸ்லாமிய பழமைவாதிகளுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

இதையடுத்து அந்த சிறுமியின் தந்தை இன்று மீண்டும் ஒரு பதிவை போட்டுள்ளார்.

அதில், இது உலகளாவிய பிரச்சினை அல்ல. அத்தகைய சூழ்நிலையைப் பயன்படுத்தி ஒரு மதத்தை கெடுக்க முயற்சி செய்யாதீர்கள்.  குழப்பமான தண்ணீரில் மீன் பிடிக்க பலர்  முயற்சி செய்கிறார்கள். இது  முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்ட, உள்ளூர் பிரச்சினை.

நீங்கள் சொல்வது போல், நான் என் சமூகத்தை எதிர்க்கும் ஒரு மனிதர் இல்லை. நான் 100% ஒரு விசுவாசி. என் மதத்தை நேசிப்பதோடு, மற்ற மதங்களை நான் ஆதரிக்கிறேன். நான் மனிதனை நேசிக்கிறேன், “என்று பதிவிட்டு உள்ளார்.

மதரசாவின் நெருக்குதல் காரணமாக உம்மர் மலயில்  இந்த பதிவை போட்டிருப்பதாகவும் பலர் விமர்சித்து வருகிறார்கள்.