கேரளா: நடிகர் மோகன்லால் பாஜக.வில் இணைகிறார்?

டில்லி:

நடிகர் மோகன்லால் பாஜக.வில் இணையவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தென்னிந்தியாவில் தமிழகம் கேரளாவில் கால் ஊன்ற பாஜக முயற்சி செய்து வருகிறது. இதற்காக அந்த மாநிலங்களின் பிரபலங்களை கட்சியில் சேர்த்து தேர்தல்களை சந்திக்க திட்டமிட்டு வருகிறது. இந்த வகையில் தமிழகத்தில் நடிகர் ரஜினிகாந்தை கட்சியில் சேர்க்க பாஜக காய்களை நகர்த்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால், இதை ரஜினியோ அல்லது அவரது நெருக்கமானவர்களோ உறுதிப்படுத்தவில்லை.

இந்நிலையில் கேரளாவில் பிரபல மலையாள நடிகர் மோகன்லால் பா.ஜ.,வில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2019 லோக்சபா தேர்தலில் அவரை திருவனந்தபுரம் தொகுதியில் களமிறக்கவும் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. டில்லியில் பிரதமர் மோடியை, மோகன்லால் நேற்று சந்தித்து பேசினார். பிரதமர் இல்லத்தில் 1 மணி நேரத்திற்கு மேல் இந்த சந்திப்பு நீடித்தது. இதை தொடர்ந்தே மோகன்லால் பாஜக.வில் இணையவுள்ளார் என்று செய்திகள் வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: kerala malayalam actor Mohanlal plans to joins BJP, கேரளா: நடிகர் மோகன்லால் பாஜக.வில் இணைகிறார்?
-=-