திருவனந்தபுரம்:

றைந்த தந்தையின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள முடியாத நிலையில், கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபர், தந்தையின் இறுதி ஊர்வலத்தை முகநூலில் கண்டு கண்ணீர் வடித்தார். இதை கண்ணீருடன் அவர் பதிவு செய்துள்ளார்…

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று கேரளாவிலும் தாண்டவமாடி வருகிறது. இந்தியாவில் முதன்முதலாக கேரளாவில்தான் கொரோனா தொற்று காரணமாக வெளிநாட்டில் இருந்து வந்த நபர் அனுமதிக்கப்பட்டுசிகிச்சை பெற்று திரும்பினார். தற்போது அங்கு பலருக்க கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், லினோபென் என்பவர் கத்தார் நாட்டில் இருந்து கேரளா திரும்பினார். இவரது தந்தை உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரை காண வந்த லினோபென், தனக்கும் கொரோனா அறிகுறி இருப்பதாக தனது சகோதரரிடம் தெரிவித்த நிலையில், அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ சோதனையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில்,  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், அவரின் தந்தை மரணமடைந்தார். ஆனால் மருத்துவர்கள் லினோபென்னை வார்டை விட்டு வெளியேற தடை விதித்த நிலையில், தந்தையின் இறுதிச்சடங்கை முகநூல் வழியாக பார்த்து கண்ணீர் வடித்தார்.

மேலும்,  தனக்கு கரோனா பாதிப்பு இல்லையென உறுதியானால் அது மகிழ்ச்சியைவிட துயரத்தையே தரும் என கூறியுள்ள  லினோ,  தன் தந்தையின் மரணத்தில் பங்கேற்காமல் போனதே தனக்கு நினைவு வரும் என்றார்.

மரணத் தருவாயில் இருக்கும் தந்தையைக் காண நாடு கடந்துவந்த மகன், ஒரே மருத்துவ மனையில் இருந்தும் வீடியோ மூலமே இறந்த தந்தையை பார்த்தது மறக்க முடியாத துயரமாகிப் போனது…