இன்னொரு பாகுபலி ஆக முயன்று யானையால் தாக்கப்பட்ட கேரளா வாலிபர் : வைரலாகும் வீடியோ

நெட்டிசன்

முகநூல் பதிவு ஒன்றில் ஒரு கேரள வாலிபர் யானையிடம் சாகசம் புரிந்து அதே யானையால் தாக்கப் பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோ லுங்கியும் வெள்ளைச் சட்டையும் அணிந்த ஒரு இளைஞர் யானையுடன் உள்ள காட்சியுடன் துவங்குகிறது.  ஒரு ரப்பர் தோட்டத்தில் ஓலைகளை சாப்பிட்ட படி அந்த யானை உள்ளது.  அந்த இளைஞர் அந்த யானைக்கு சிறிது தூரத்தில் தன் கையில் உள்ள பாலிதீன் கவரை வைக்கிறார்.   பிறகு அதிலுள்ள வாழப்பழங்களை யானைக்கு தருகிறார்.

ஒன்றிரண்டு வாழைப்பழத்தை சாப்பிட்டதும் அந்த யானை மேலும்வாழைப்பழத்தை வேண்டி தும்பிக்கையை நீட்டுகிறது.    அந்த இளைஞரும் அந்த யானைக்கு வாழைப்பழத்தை கொடுக்கிறார்.    அது சாப்பிட்டு முடிந்ததும் அந்த யானையின் தந்தங்களைப் பிடித்து அதன் தும்பிக்கையில் முத்தம் கொடுக்கிறார்.  யானை ஒன்றும் செய்யவில்லை.  பிறகு அந்த யானையின் தந்தங்களை பிடித்து ஏறுவது போல முயல்கிறார்.   அது கிட்டத்தட்ட பாகுபலி திரைப்படத்தில் பிரபாஸ் தும்பிக்கை வழியாக மேலே ஏறுவதைப் போல உள்ளது.

இந்த வீடியோவை நேரலையாக எடுத்து வந்த இளைஞர்களின் நண்பர்களில் ஒருவர்,,  “வேண்டாம்.   அப்படிச் செய்யாதே.   நீ கள் அருந்தி இருக்கிறாய்.   யானைக்கு மதம் பிடிக்கும்” என மலையாளத்தில் சத்தம் போசுகிறார்.   அதை கேட்காமல் யானையின் தும்பிக்கை மேல் ஏற முயலும் இளைஞரை யானை தன் தும்பிக்கையால் எட்டி வீசி விடுகிறது.    காற்றில் பறந்து தலை குப்புற விழும் அந்த இளைஞர் உருண்டு மயக்கமாகி விடுகிறார்.

லைவ்வாக ஒளிபரப்பப் பட்டு பின்பு இந்த வீடியோ ஃபேஸ்புக்கில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.   ஆனால் நீக்கப் படும் முன்பே பலரால் பதியப்பட்டு இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.