கோழி கூவும் நேரத்தில் விசாரணைக்கு வந்த அமைச்சர்..

கோழி கூவும் நேரத்தில் விசாரணைக்கு வந்த அமைச்சர்..
 
தூதரகம் வாயிலாகக் கேரளாவுக்குத் தங்கம் கடத்தி வரப்பட்ட வழக்கு தொடர்பாக அந்த மாநில உயர்கல்வி துறை அமைச்சர் கே.டி..ஜலீலை, அமலாக்கத்துறை ஏற்கனவே விசாரித்துள்ளது.
 
இந்த வழக்கை விசாரிக்கும் தேசிய புலனாய்வு முகமையும் அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்தது.
அதற்கு ஒப்புக்கொண்ட அமைச்சர் ஜலீல் கொச்சியில் உள்ள தேசிய புலனாய்வு அலுவலகத்துக்கு நேற்று அதிகாலை 5.30 மணிக்கெல்லாம் வந்து விட்டார்.;
வழக்கமாக அந்த அலுவலகம் காலை 9 மணிக்குத் தான் திறக்கப்படும்.; ஆனால் ஊடகங்களின் பார்வையில் இருந்து தப்பிக்கும் வகையில் முன்னாள் எம்.;எல்.ஏ.; ஒருவருக்குச் சொந்தமான காரில் , கோழி கூவுவதற்கு முன்னாலேயே ஜலீல் அந்த அலுவலகத்துக்கு வந்து விட்டார்.;
 
காலை 9 மணிக்கு; பிறகே அலுவலர்கள் அங்கு வந்தனர்.
 
உடனடியாக அவரிடம் அலுவலர்கள் துருவித் துருவி விசாரணை நடத்தினர்.;
 
சுமார் 8 மணி நேரம் அமைச்சர் ஜலீலிடம் விசாரணை நடந்துள்ளது.. மாலை 5 மணி வாக்கில் விசாரணை முடிந்து கொச்சியில் இருந்து அவர் திருவனந்தபுரம் புறப்பட்டுச் சென்றார்.;
 
 
-பா.;பாரதி.