கேரளா : அமைச்சரின் பாதுகாவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

 

திருவனதபுரம்

கேரள நீர்பாசனத்துறை அமைச்சரின் பாதுகாவலர் தன்னைதானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

திருவனந்தபுரம் ஆயுதப்படை முகாமில் காவலர் பணியில் உள்ளவர் சுஜித். கடைக்கல் பகுதியை சேர்ந்த 30 வயது இளைஞரான சுஜித்துக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் கடந்த இரு வருடங்களாக கேரள நீர்பாசனத்துறை அமைச்சர் மாத்யூ டி தாமஸ் இடம் பாதுகாவலராக உள்ளார்.

இவர் தினமும் இரவு பணி முடிந்ததும் கடைக்கல்லில் உள்ள தனது இல்லத்துக்கு திரும்புவது வழக்கம். அதே போல நேற்று முன் தினம் பணியில் இருந்து திரும்பிய இவர் முதல் மாடியில் உள்ள தனது அறையில் தூங்க சென்றுள்ளார். காலை 6 மணிக்கு எழுந்து விடும் பழக்கம் கொண்ட சுஜித் காலை 8 மணி ஆகியும் எழுந்து வரவில்லை.

அதனால் அவரது பெற்றோர் பதற்றம் அடைந்து கதவை தட்டியும் திறக்கவில்லை. அக்கம் பக்கத்தினர் தகவல் அறிந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்றுள்ள்னர் அறையினில் நெற்றியில் குண்டு பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் சுஜித் சடலமாக கிடந்தார். அவர் இரு கை நரம்புகளும் அறுக்கப்பட்டிருந்தன.

காவல்துறையினர் அங்கு வந்து சுஜித் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். காவல்துறையினர் ”சுஜித் தனது பணிக்கு பயன்படுத்தும் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துக் கொண்டிருக்கலாம் என சந்தேகம் உள்ளது.

மேலும் பணி முடிந்த பிறகு ஒப்படைக்க வேண்டிய் துப்பாக்கியை சுஜித் எவ்வாறு எடுத்துச் சென்றார் என்பதும் ஐயமாக உள்ளது. அவர் தற்கொலை செய்துக் கொள்ள காரணம் என்ன என்பதும் தெரியவில்லை” என கூறி உள்ளனர்.

கார்ட்டூன் கேலரி