கேரளா: பாலியல் பலாத்கார வழக்கில்  எம்.எல்.ஏ., கைதுதிருவனந்தபுரம்:

கேரள மாநிலம், கோவளம் தொகுதியில்  காங்., சார்பில் போட்டியிட்டு வென்ற எம்.எல்.ஏ.  வின்சென்ட், பாலியல் பலாத்கார வழக்கில் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

நெய்யாற்றன்கரை என்ற பகுதியை சேர்ந்த 51வது பெண் தற்கொலைக்கு முயற்சி செய்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  தனக்கு எம்.எல்.ஏ.  வின்சென்ட் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்ததாகவும் அதனால் தற்கொலை செய்துகொள்ள முயன்றாதாகவும் அவர் வாக்குமூலம் அளித்தார்.

இதையடுத்து வின்சன்ட் மீது தற்கொலைக்கு தூண்டுதல்,  பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட சில பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையே  கொல்லம் நகர போலீஸ் கமிஷனர் அஜிதா பேகம், ” எம்.எல்.ஏ., வின்சென்டிடம் விசாரணை நடத்துவது தொடர்பாக அனுமதி கேட்டு சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனிடம் மனு செய்யப்பட்டுள்ளது,” என்றார்.

இந்த நிலையில் இன்று மாலையில் எம்.எல்.ஏ., வின்சென்ட் கைது செய்யப்பட்டார்.

கேரள காங்., தலைவர் எம்.எம்.ஹசன், “அவசியம் என்றால் தனது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ய தயாப்தாக வின்சென்ட் கூறியுள்ளார்” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.

You may have missed