‘படித்ததும் புதையுங்கள்’…கேரளா எம்எல்ஏ.வின் வித்தியாசமான திருமண அழைப்பிதழ்

--

திருவனந்தபுரம்:

கேரளாவில் சுயேட்சை எம்.எல்.ஏ.வாக இருப்பவர் அப்துரஹ்மான். இவரது மகள் ரிஷ்வானா. இவருக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. இதற்கான திருமண அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டுள்ளது. வித்தியாசமான முறையில் அச்சடிக்கப்பட்டுள்ள இந்த பத்திரிக்கை பலத்த வரவேற்பபை பெற்றுள்ளது.

அழைப்பிதழை படித்தவுடன் புதைத்துவிடுங்கள் என்ற வாசகம் பத்திரிக்கையில் இடம்பெற்றுள்ளது. இத குறித்து அப்துஹ்மானின் பதில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் கூறியதாவது:-

‘‘அழைப்பிதழ் 100 சதவீதம் மறுசுழற்சி செய்யக்கூடிய தாளில்தான் அச்சடிக்கப்பட்டுள்ளது. அழைப்பிதழை சுற்றிலும் கத்தரிக்காய், வெண்டைக்காய் உள்ளிட்ட தாவரங்களின் விதைகள் ஒட்டப்பட்டுள்ளது. அதனால் தான் அழைப்பிதழை படித்த பின்பு புதைத்து விடுங்கள் என்ற வாசகம் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அழைப்பிதழில் ஒட்டுப்பட்டுள்ள விதைகள் நாளடைவில் வளர்ந்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும். நண்பர் ஒருவர் மூலமாக இந்த ஆலோசனை கிடைத்தது’’ என்றார்.