லப்புரம், கேரளா

லி மாசு அடைவதை தடுக்க, ஒரு முறையே பாங்கு ஓசை ஒலிபெருக்கியில் ஓதப்படும், பிறகு ஒலிபெருக்கி உபயோகப்படுத்த மாட்டோம் என கேரளாவின் புகழ்பெற்ற மசூதி அறிவித்துள்ளது.

கேரளா மாநிலம், மலப்புரம் மாவட்டம் இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள பகுதி.

அங்குள்ள வழக்காடு பகுதியில் உள்ள வல்லிய ஜும்மா மசூதி கேரளாவின் புகழ் பெற்ற மசூதிகளில் ஒன்று.

இஸ்லாமிய வழக்கப்படி இந்த மசூதியிலும் தொழுகைக்கு அழைக்க பாங்கு ஒலிபெருக்கு மூலமாக ஓதப்படும்.

கடந்த 2015ஆம் வருடம் முசுலீம் லீக் தலைவர் சையத் ஹைதர் அலி தங்கல் இந்த ஒலிபெருக்கி ஓசையால் ஒலி மாசு அடைவதோடு, உடல்நலமற்றோர், குழந்தைகள், ஆகியோருக்கு தொல்லை தருவதோடு, இஸ்லாமியர் அல்லாதாருக்கு இது ஒருவகை இடைஞ்சலாக இருக்கக்கூடும், எனவே இதை நிறுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இதனால் மசூதி தனது கமிட்டி கூட்டத்தை கூட்டி இந்த தீர்மானத்தை நிறைவேற்றியது.

மற்ற உறுப்பினர்களிடையில் முதலில் கடும் எதிர்ப்பு இருந்தது.

மெல்ல, அவர்களும் இந்த தீர்மானத்தை ஏற்றுக் கொண்டனர்.

இதைக்கண்ட அக்கம் பக்கம் ஊர்களில் உள்ள 17 மசூதிகளும் இதே போல் தீர்மானம் இயற்றி அதை ஒப்புக்கொண்டுள்ளன.

இந்த தீர்மானத்தை அனைத்து மக்களும் வரவேற்றுள்ளனர்.

இதே பகுதியில் உள்ள ஒரு இந்துக் கோயிலில் சமீபத்தில் இஸ்லாமியர்களுக்கு சைவ இஃப்தார் விருந்து வைத்தது குறிப்பிடத்தக்கது