திருவனந்தபுரம்,

லக எய்ட்ஸ் தினத்தையொட்டி கடந்த 3ந்தேதி  இஸ்லாமிய கல்லூரி பெண்கள் சிலர் ரோட்டில் நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தியிருந்தனர். இதற்கு இஸ்லாமிய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தும் மிரட்டியும் வருகிறது.

இந்நிலையில், அந்த மாணவிகளுக்கு கேரள முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்கள், மகளிர் கமிஷன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அவர்கள்மீது வழக்கு பதிவு செய்ய சைபர் கிரைமுக்கு உத்தரவிடப்ட்டுள்ளது.

உலகம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் டிசம்பர் 1ந்தேதி எய்ட்ஸ் தினம் கடை பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மக்களிடையே விழிப்புணர்வு நோக்கி, கடந்த 3ந்தேதி விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதில், நடுரோட்டில், ‘ஜிமிக்கி கம்மல்’ பாடலுக்கு மூன்று முஸ்லிம் பெண்கள் நடனமாடினர்.  பல் மருத்து கல்லூரி மாணவிகளான அவர்கள்,   உலக எய்ட்ஸ் தினம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடுரோட்டில் நடமாடினர் என்பது பின்னர் தெரிய வந்தது.

ஆனால், அந்த  மூன்று பெண்களும் ஜீன்ஸ் பேன்ட் அணிந்து தலையை துணியால் மூடிக் கொண்டு நடனமாடியது இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு எதிரானது எனக்கூறி சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது; அவர்களுக்கு மிரட்டலுக்கு விடுக்கப்பட்டது. இது குறித்து சில முஸ்லிம் அமைப்பினர் மிரட்டலும் விடுத்தனர்.

இந்நிலையில், சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்தவர்கள் மீது, வழக்கு பதிவு செய்யும்படி கேரள மகளிர் கமிஷன் தலைவர் எம்.சி. ஜோசபின், சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், ” மூன்று பெண்களுக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு பிரசாரம் செய்யப்பட்டுள்ளது. இது கேரள கலாச்சாரத்திற்கு எதிரானது. இதுபோன்ற கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.